தலைநகர் டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் இளைஞர் ஒருவர் தனது பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, தெருவில் கேஸ் சிலிண்டருக்குத் தீவைத்து பயங்கர வெடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், போதை போதையில் தனது தாயை வீட்டின் உள்ளேயே வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே உள்ள தெருவிற்குக் கொண்டுவந்து, அதற்குத் தீவைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்தச் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த வெடி விபத்தில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் எவரும் இந்த விபத்தில் சிக்கி காயமடையவில்லை. சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த விபரீத முடிவிற்கான முழுமையான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
