காதலி இரவில் அழைத்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, அவரது வீட்டிற்கு ரகசியமாகச் சென்ற இளைஞர் ஒருவர், பெண்ணின் குடும்பத்தினரிடம் கையும் களவுமாகச் சிக்கிய சுவாரசியமான மற்றும் பரிதாபகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவின் அமைதியில் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த இளைஞரை, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கவனித்துச் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.
தான் மாட்டி கொண்டதை உணர்ந்த அந்த வாலிபர், உடனடியாகத் தனது நண்பனுக்குத் தொலைபேசியில் அழைத்து, “மச்சான் என்னை பிடிச்சுட்டாங்கடா, எப்படியாவது வந்து என்னைக் காப்பாத்து!” என அழுது புலம்பியுள்ளார். மேலும் அங்கிருந்த பெண்ணின் குடும்பத்தினரிடம், “அண்ணே என்ன விட்டுடுங்க, இனிமேல் இந்தப் பக்கமே வரமாட்டேன்” என எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடுவிப்பதாக இல்லை.யோசிக்காமல் இரவில் சென்று சிக்கிய அந்த இளைஞரின் பரிதாப நிலையைச் சித்தரிக்கும் இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பையும், அதே வேளையில் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
