படமெடுத்து ஆடிய ராஜ நாகத்தை அசால்ட்டாக பைக்குள் அடைத்த இளைஞர்… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on ஆனி 25, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இது பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் பலரும் ரசிக்கின்றனர். அதன்படி பாலைவனப் பகுதியில் மணலின் மேல் ராஜ நாகம் ஒன்று படமெடுத்தபடி ஊர்ந்து வருகின்றது. இதனை கவனித்த இளைஞர் ஒருவர் பாம்பை மஞ்சள் பைக்குள் அடைப்பதற்காக ஒரு குழாயை பையுடன் இணைத்து பாம்பின் முன் காட்டுகின்றார்.

படம் எடுத்து பயம் காட்டிய பாம்பு மெதுவாக அந்த பைக்கில் சென்று விட்டது. அவ்வளவு பெரிய பாம்பு அசால்ட் ஆக எப்படி அந்த மஞ்சள் பைக்குள் செல்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக உள்ளது. சிலர் தான் வளர்த்த பாம்பை இவ்வாறு காணொளிக்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.