“ப்ளீஸ் என்னை விட்டுரு…” கெஞ்சிய மனைவி… ரகசிய திருமணத்தால் தாலியை கழற்றி… மாமியாரை கொடூரமாக கொன்ற வாலிபர்…. பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 17, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தில் வாடகைக்கு வசித்து வந்த பழனிசாமி – தனலட்சுமி தம்பதியின் 21 வயது மகள் பூவரசி. இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்‌ஷய் என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தகவல் பூவரசியின் வீட்டிற்குத் தெரியவரவே, பெற்றோர் பூவரசியின் தாலியைக் கழற்றி அக்‌ஷய்யுடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்‌ஷய், குடும்பத்தினரைச் சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்தபோது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

வாக்குவாதம் முற்றியதில் வெறிபிடித்த அக்‌ஷய், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாமியார் தனலட்சுமியைச் சரமாரியாக வெட்டிக் கொன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தன்னை விட்டுவிடுமாறு உயிருக்குப் போராடிக் கெஞ்சிய மனைவி பூவரசியையும் இரக்கமின்றி வெட்டிக் படுகொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்தக் கறையுடன் தப்பியோட முயன்ற அக்‌ஷய்யைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களுடன் பழகி வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பெரும் ஆபத்தாக முடிவதையே இச்சம்பவம் காட்டுகிறது.