தமிழகத்தில் உச்சகட்ட பயங்கரம்… 77 வயது மூதாட்டியை கதற கதற… 24 வயது இளைஞர் செய்த கொடூரம்… கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on தை 25, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அஜித்குமார், அப்பகுதியில் மேளம் அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 22-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அஜித்குமார், மூதாட்டியிடம் மது குடிக்கப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மூதாட்டி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மூதாட்டியை மிகக் கொடூரமாகத் தாக்கி அவர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த மூதாட்டி மயக்கமடைந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கருதி அஜித்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, மூதாட்டி காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மூதாட்டியின் மகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருந்த அஜித்குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த இந்த அவலநிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.