மும்பை பாந்த்ரா – வொர்லி கடல்பாலத்திலிருந்து குதிக்க முயன்ற 28 வயது இளைஞரை சுங்கச்சாவடி ஊழியர்களும் காவல்துறையினரும் உடனடியாகச் செயல்பட்டு மீட்டனர். இந்த தத்ரூபமான மீட்பு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கான்சோலியைச் சேர்ந்த ரோஹன் கணேஷ் போசலே என்ற அந்த இளைஞர், இரவு 10.30 மணியளவில் உபெர் டாக்ஸியில் வந்து இறங்கியுள்ளார். காரை விட்டு வெளியேறிய அவர், பாலத்தின் தடுப்புச் சுவரைக் கடந்து கடலில் குதிப்பதற்காக ஏற முயன்றுள்ளார்.
https://twitter.com/nextminutenews7/status/2098653990338941285/video/1
இதை உடனடியாகக் கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்களான சுமேத் சாவந்த், சந்தீப் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கடம், பெட்னேகர் ஆகியோர் சரியான நேரத்தில் அவரைப் பிடித்துக் கீழே விழாமல் காப்பாற்றினர். மீட்கப்பட்ட போசலே கடல்சார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
