“என் பெரியம்மாவை கொன்னுட்டாங்க சார்…” முதல் ஆளாக அழுது புலம்பிய வாலிபர்… ஒரே ஒரு கம்மலால் வெளிச்சத்திற்கு வந்த இரட்டை கொலை…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 14, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரான கலாவதி என்ற மூதாட்டி, கடந்த 7-ஆம் தேதி கடப்பாரையால் குத்தி படுகொலை செய்யப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு முதல் ஆளாகத் தகவல் கொடுத்து நாடகமாடிய அதே ஊரைச் சேர்ந்த திருமேனி முருகன் (25) என்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட கலாவதி திருமேனி முருகனுக்கு பெரியம்மா முறை ஆவார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இருப்பிடத்தை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், காதலியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கிக் கொன்று, நகைகளைப் புதைத்து வைத்ததை அவன் ஒப்புக்கொண்டான்.

அவனிடமிருந்து நகைகளை மீட்க அடகுக் கடைக்குச் சென்றபோது, அவன் ஏற்கனவே அடகு வைத்திருந்த ‘பாம்பட’ கம்மல், சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பேச்சியம்மாள் என்ற வேறொரு மூதாட்டியுடையது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஐந்து வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் கார், பைக், டிராக்டர் மற்றும் வங்கியில் பல லட்ச ரூபாய் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இந்த வாலிபரின் பின்னணியில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. தற்பொழுது அவனைக் கைது செய்துள்ள போலீசார், நகைகளையும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.