இங்கிலாந்தில் சிம்-ஸ்வாப்பிங் முறையைப் பயன்படுத்தி சுமார் ரூ.2.56 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியைத் திருடிய வழக்கில், அஜய் ஷின்ஜின் (25) என்பவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏஜே மார்லி க்ரூஸ் என்றும் அழைக்கப்படும் இவர், நான்கு நபர்களின் கிரிப்டோ கணக்குகளை ஹேக் செய்து இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
மோடிக்கப்பட்ட பணத்தில் கணிசமான பகுதியைப் பெற்றுக்கொண்ட இவர், லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில் ஒரு உயர் ரக சொகுசு பிளாட் வாடகைக்கு எடுத்ததுடன், துபாய்க்குத் தொடர்ச்சியாக ஆடம்பரப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பற்களுக்குத் தங்கம் பதிக்கும் ‘கோல்டன் கிரில்ஸ்’ செய்துகொண்டு ஊதாரித்தனமாகச் செலவழித்துள்ளார். துபாயில் இருந்து ஹீத்ரோ விமான நிலையத்திற்குத் திரும்பியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது.
