“தனியாக நின்ற கார்…” திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப் போலீசார் அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று திடீர் சோதனை செய்தனர். பாரின் பின்புறம் நின்ற கார், ஸ்கூட்டரை சோதனை செய்தபோது 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த மூன்று பேரைப் பிடிக்க முயன்றபோது இருவர் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உருவாடி பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் சிவக்குமார் (45) என்பது தெரியவந்தது.

விசாரணையில் கோபி டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், ரூ.95 ஆயிரம் பணம், கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிவகங்கை வெள்ளகுழி சிலம்பரசன், மதுரை மோசஸ் என்கிற மோகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.