நிர்வாண நிகழ்ச்சி விருந்து… ஜாலியா இருக்க ரூ.1 லட்சம் கொடுத்த தம்பதிகள்… இந்தியாவையே அதிரவிடும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள கிளப் மற்றும் எஸ் எஸ் ஃபார்ம் , ஸ்ட்ரேஞ்சர் ஹவுஸ் பூல் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடந்தது போலவே நிர்வாண விருந்தை நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர். வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி தனியார் பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை கூட மிகவும் ரகசியமாகவே வைத்திருந்த நிலையில் செல்போன்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருவருக்கு தலா ₹40,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகள் மற்றும் தம்பதியினர் ஒரு லட்சம் கூட கொடுக்க தயாராக இருந்தனர்.

மும்பை மற்றும் பெங்களூருவை சேர்ந்த திரை பிரபலங்கள் கூட இதில் பங்கேற்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளனர். இது இளைஞர்களுக்கான ஒரு உயர் மட்ட கூட்டம் என்றும் இதில் நிறுவனமாக கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போஸ்டர் வெளியிட்ட நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.