மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் வசித்து வரும் 27 வயதான வாலிபர் ஒருவர் யுனிவர்சிட்டி காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னுடைய தோழியுடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றேன். இருவரும் 5 மணி நேரம் அங்கு தங்கி இருந்தோம். மேலாளரிடம் 1200 ரூபாய் அறை வாடகை கொடுத்துவிட்டு இருவரும் திரும்பி விட்டோம். ஆறு நாட்கள் கழித்து மர்ம நபரின் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில், தோழியுடன் ஹோட்டலில் தங்கிய வீடியோ தன்னிடம் உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோவை வைரல் ஆக்கி விடுவேன் என்று மிரட்டல் செய்து இருந்தது.
இதனால் பயந்து போன அவர் பணம் ஏற்பாடு செய்ய ஆறு நாட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இரண்டு நாட்களில் பணம் வேண்டும் என மிரட்டல் விடுத்ததால் பயந்துபோன வாலிபர் உடனே போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் அரை மணி நேரத்திற்குள் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் பணம் போட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போய் ஆன்லைன் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் மீதம் உள்ள 95 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் மட்டுமே வீடியோவை அழிக்க முடியும் என்று பதில் வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபருடைய காதலியின் தோழியே அந்த மர்ம நபர் என தெரியவந்துள்ளது. அவர் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவி. அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய நண்பர் மற்றும் மற்றொரு வாலிபருடன் சேர்ந்து இந்த மிரட்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த காதலி வாலிபருடன் செல்லும் போது தோழியும் சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் இருந்த பல்பு பின்னாடி ஸ்பை கேமராவை வைத்து இந்த ஜோடியை தோழி மற்றும் அவருடைய நண்பர் உழவு பார்த்துள்ளனர். அதே சமயம் மிரட்டல் காரர்களுக்கு பணம் தர உதவுவது போன்று நடித்துள்ளனர். தற்போது மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…