போபாலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மேல் ஏரி (Upper Lake) அருகே உள்ள சீத்தல் தாஸ் கி பகியா (Sheetal Das Ki Bagiya) பகுதியில், ஜோடி ஒன்று அணைத்து முத்தமிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சம் நிறைந்த பொது இடத்தில் அமைந்திருக்கும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, பெண் தனது துப்பட்டாவால் இருவரின் தலையையும் மூடிக்கொண்டு முத்தமிடும் காட்சிகளை, அங்கு இருந்த நபர் ஒருவர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இந்த இடத்தில் அரங்கேறிய இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் பார்வையாளர்களிடையேயும் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
https://www.instagram.com/reel/DbuucWqy4Qp/?utm_source=ig_embed&ig_rid=AkXvoha7nzFvM3UJZ2BvRfB
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களில் இது போன்ற கண்ணியமற்ற நடந்து கொள்ளும் பண்பாட்டிற்கு சமூக வலைதளவாசிகளும் உள்ளூர்வாசிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாலையில் குடும்பத்துடன் வரும் மக்களுக்கு இத்தகைய சம்பவங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், ஏரிக்கரையின் அமைதியான குடும்பச் சூழலைப் பாதுகாக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் ஏரிப் பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பொது அமைதியைப் பேண கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…
மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ…
அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…
அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர், தான் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள…