தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான்.

தமன்னா தற்போது odela 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை 4 படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். கிட்டத்தட்ட 18 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய நடனம் சமீபகாலமாகவே இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் தொடங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை அவருடைய நடனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரவீனா டாண்டனின் மகளும் 19 வயதான இளம் நடிகை ராஷா ததானி சட்டென்று தமன்னாவை ஆன்ட்டி என்று அழைக்க அதற்கு பட்டென்று அவர் ராஷா ததானி தோல் மீது லேசான அடிபோட்டு ஆண்டி எல்லாம் சொல்லக்கூடாது என்று செல்லமாக கண்டித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
SHOCKINGLY #Tammana Says CALL ME AUNTY no issue #RashaTadani – Great Gesture From Tammu 😳😳😳😳😳
— GetsCinema (@GetsCinema) January 21, 2025
