BREAKING: “அமர மாட்டோம்”…. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி… சட்டப்பேரவையில் ஆவேசத்தின் உச்சம்… ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றித்துக் கழகத்தில் இணைந்தது தொடர்பான விவகாரம் எதிரொலித்து கடும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. ராஜினாமா செய்யப்பட்ட அந்த 6 தொகுதிகளிலும் மக்கள் எதிர்கொள்ளும் அத்தியாவசியப் பிரச்சினைகள் மற்றும் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவில்லை என திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவையில் கருத்து தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இருப்பினும், இந்த விவாதத்தின் இடையே ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தையை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததால் அவையில் பெரும் சலசலப்பு உருவானது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுகுறித்து சட்டமன்றத்தில் விரிவாகப் பேச அனுமதியில்லை என்று சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து மைக் அணைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாகத் தங்கள் இடங்களிலிருந்து எழுந்து நின்று பலத்த எதிர்ப்பைப் பதிவிட்டனர். அவர்களை அமருமாறு சபாநாயகர் அறிவுறுத்தியபோது, கோபத்தின் உச்சிக்கே சென்ற எடப்பாடி பழனிசாமி, “பேச விடவில்லை என்றால் நிற்கத்தான் செய்வார்கள்” என சபாநாயகரை நோக்கி ஆவேசமாக முழங்கினார். இதனால் அவையில் பெரும் பரப்பரப்பும் அமைதியின்மையும் நிலவியது.