‘உனக்கு எந்த இடத்துக்கும் தகுதியே இல்ல!’…. ADK மற்றும் ஷிவின் இடையே ஏற்பட்ட மோதல்!… போர்க்களமாய் மாறிய பிக் பாஸ் வீடு!… பரபரப்பான பிரமோ இதோ!…

‘உனக்கு எந்த இடத்துக்கும் தகுதியே இல்ல!’…. ADK மற்றும் ஷிவின் இடையே ஏற்பட்ட மோதல்!… போர்க்களமாய் மாறிய பிக் பாஸ் வீடு!… பரபரப்பான பிரமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சிக்கு இருப்பது போன்று  ரசிகர்கள் வேறு எந்த நிகழ்ச்சியும் கொண்டிருந்ததில்லை. 21 போட்டியாளர்கள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் மைனா நந்தினி, ரட்சிதா குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்களில் ஒருவர் வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதில் ராங்கிங் டாஸ்க் இடம்பெறுகின்றது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்று முதல் பத்து வரை ராங்கிங்  செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அதில் ஷிவினுக்கும் ஏடிகேவிற்கும் இடையில் பலத்த சண்டை இடம்பெறுகின்றது. அதில் ஏடிகே ‘உனக்கு எந்த இடத்திற்கும் தகுதி இல்லை, போய்ட்டு பத்தில் இறுதியாக நில்லு’ எனக் கூறிக் கத்துகின்றார்.

இதனைத் தொடர்ந்து விக்ரமனுக்கும் அசீமிற்கும் இடையில் பலத்த சண்டை இடம்பெறுகின்றது. அசீம் ‘ஏன் விக்ரமன் கட்டப் பஞ்சாயத்திற்கு வர்ரீங்க, அது உங்களுக்கு பழக்கமாகிடிச்சா?’எனக் கேட்கின்றார்.  அதுமட்டுமல்லாது ‘அமுதவாணனை பேசியது என் விருப்பம்’ எனவும் கூறிக் கோபத்தில் கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்த ப்ரோமோ….

Begam