சென்னையில் பொது போக்குவரத்துக்கு சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிங்கார சென்னை அட்டையின் மூலமாக பேருந்து மற்றும் மெட்ரோ பயணங்களில் பயணச்சீட்டை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே OR பயண சீட்டு மூலமாக ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று (chennai one) செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 22 இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலமாக பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ் நேர இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும். UPI அல்லது கட்டண அட்டைகள் மூலமாக பயண சீட்டு பெறலாம். இந்தியாவில் முதல்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் இந்த செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆகிய இரண்டு தளங்களிலும் செயல்படும். ஒரே பயண பதிவின் மூலமாக அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பழமொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பயண சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி மூலமாக எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…