இனி ரேஷன் கார்டு தேவையில்லை.. பொருள் வாங்க ஆதார் இருந்தாலே போதும்… அரசின் அருமையான திட்டம்..!!

By Soundarya on பங்குனி 4, 2026

Spread the love

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சகம், பொதுமக்களின் வசதிக்காக ‘மேரா ரேஷன் 2.0’ (Mera Ration 2.0) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் சிறப்பம்சமாக, இனி ரேஷன் அட்டை கையில் இல்லாமலேயே, பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்தி நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இச்செயலியில் உள்ள டிஜிட்டல் ரேஷன் கார்டை (Digital Ration Card) காண்பித்து பொருட்களை வாங்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன வசதி, குறிப்பாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் பயணத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை ரேஷன் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ எந்தவித சிரமமுமின்றி ரேஷன் பொருட்களைத் தடையின்றிப் பெற இது உதவும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வசதி, பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையையும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலையும் ஊக்குவிக்கிறது.