நீங்க இன்னும் பாத்திரம் கழுவ லிக்விட் கடையில வாங்குறீங்களா.. வீட்டிலேயே லிப்ஸ்டிக் செய்யலாம்.. இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

வீட்டில் உள்ள பாத்திரங்களை அனைவருமே டிஷ்வாஷ் சோப்பு, லிக்விட் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்வோம். எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் சில பாத்திரங்களில் உள்ள எண்ணை பிசுக்கு மற்றும் துர்நாற்றம் போகவே போகாது. துர்நாற்றம் இல்லாதவாறு பளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சமைப்பதை விட பாத்திரத்தை கழுவுவதுதான் கடினம். பிரியாணியில் சேர்க்கும் பிரிஞ்சி இலை இருந்தால் போதும் அனைத்து பாத்திரத்தையும் சுத்தம் செய்து விடலாம். குறிப்பாக இறைச்சி சமைக்கும் பாத்திரத்தில் மட்டும் எவ்வளவுதான் கழுவினாலும் துர்நாற்றம் அப்படியே இருக்கும். பிரிஞ்சி இலையில் அரோமெட்டிக் டியோடரண்ட் பம்பு உள்ளது, இது இயற்கையாகவே கெட்ட துர்நாற்றத்தை விரட்டும்.

எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களில் பிரிஞ்சி பயன்படுத்தி சுத்தம் செய்தால் பாத்திரத்தில் படிந்திருக்கும் கொழுப்புகளை எளிமையாக எடுத்து விடும். பிரிஞ்சி இலையில் ஆண்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. பாத்திரத்தில் உள்ள கிருமிகளையும் கொள்ளும். தண்ணீரில் பிரிஞ்சி இலையை ஊற வைத்து அதில் பாத்திரத்தை சிறிது நேரம் ஊற விட்டு கழுவினால் பாக்டீரியாக்கள் ஓடிவிடும். லிக்விட் சோப்பு போன்றவற்றை வாங்கி பணத்தை வீணாக்குவதை விட பிரிஞ்சி இலையை பயன்படுத்தி பாத்திரத்தை சுத்தம் செய்து பணத்தை மிச்சம் படுத்துங்கள். அதேபோல் லிக்விட் சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. பிரிஞ்சி இலையில் இது போன்ற எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அதேபோல் லிக்விட் சோப்புகளை பயன்படுத்தி பாத்திரத்தை சுத்தம் செய்தால் அந்த ரசாயன வாசனை பாத்திரத்தில் இருந்து கொண்டே இருக்கும். நாம் சமைக்கும் சமையலிலும் அந்த ரசாயன வாசனை பரவும்.

   

பிரிஞ்சி இலை லிக்விட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். கொதிக்கும் தண்ணீரில் சில பிரிஞ்சி இலையை போட வேண்டும். பின்பு அந்தத் தண்ணீர் ஆரிய பிறகு டிஷ்வாஷ்க்கு பதிலாக இந்த தண்ணீரை வைத்த பாத்திரத்தை சுத்தம் செய்யலாம். எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிரிஞ்சி இலையை அதிலே போட்டு ஊற வைத்து கழுவுங்கள். லிக்விட் வாங்குவதற்கு பதிலாக இதுபோல வீட்டிலேயே லிக்விட் தயாரித்து உபயோகித்து பாருங்கள்.