அட டூத் பேஸ்ட் இதுக்கெல்லாம் உதவுமா?.. இல்லத்தரசிகளே உடனே நோட் பண்ணுங்க…. இனி உங்க வீடு ஜொலிக்கும்…!

By Divyamayakannan on ஆவணி 18, 2025

Spread the love

அனைவர் வீட்டிலுமே டூத் பேஸ்ட் இருக்கும். டூத் பேஸ்ட் பல் தேக்க மட்டும் கிடையாது. அதையும் தாண்டி வீட்டில் நாம் தினமும் உபயோகிக்கும் பொருள்களை எப்படி சுத்தம் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் காண்போம். டூத் பேஸ்டில் உள்ள ஃப்ளூரைடு எனப்படும் திரவியம் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. நீங்கள் உபயோகிக்கும் ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஷூ வை எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம். ஸ்னீக்கர்ஸில் உள்ள அழுக்கு மீது டூத் பேஸ்ட் வைத்து சிறிது ஈரம் செய்து மெதுவாக தேய்த்து துணியால் துடைத்தால் போதும் கறை நீங்கிவிடும்.

பாத்ரூமில் குறிப்பாக டைல்ஸில் உள்ள கறைகள் மீது ஒரு துளி டூத் பேஸ்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து கரையின் மீது ஊற்றி 5நிமிடம் கழித்து துணியால் அழுத்தி துடைத்தால் கரை நீங்கி பளபளவென்று ஆகிவிடும். அதேபோல் கண்ணாடியின் மீதும் ஊற்றி துடைத்தால் கண்ணாடி மின்னும்.

   

அனைத்து வீடுகளிலும் ஃபர்னிச்சர்கள் இருக்கும். ஃபர்னிச்சர்கள் மீது தண்ணீர் ஊற்றி விட்டால் அந்த இடத்தில் மட்டும் கரையாக தெரியும். அதை நீக்குவதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை தேய்த்து மென்மையான துணியில் துடைத்தால் சரி ஆகிவிடும். டூத் பேஸ்ட்டை கொண்டு மரக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம்.

   

அதேபோல் வெள்ளி பொருள்களில் கருப்பு படிந்திருக்கும் அதில் டூத் பேஸ்ட் சிறுதுளி எடுத்து துணியைக் கொண்டு தேய்த்து எடுத்தால் வெள்ளி பொருட்கள் பளிச்சென்று ஆகிவிடும். காரின் ஹெட்லைட்டில் அழுக்கு படிந்து இருக்கும். அதில் சிறிது வெதுவெதுப்பான நீரில் டூத் பேஸ்ட் கலந்து மென்மையான துணியில் லேசாக தேய்த்து எடுத்தால் போதும் பளிச்சென்று மின்னும். இதனால் ஹெட் லைட்க்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் வீடியோவை அடிப்படையில் வெளியிட்டுள்ளது . மருத்துவ ஆலோசனைக்கு எதிரானது அல்ல. வீடியோவில் உள்ளதை பகிர்ந்து உள்ளோம் இதை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் விருப்பம்.