இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அர்ஜுன் டெண்டுல்கர் தனது கவனத்தை விளையாட்டில் செலுத்தாமல் சமூக வலைதளங்கள், பார்ட்டிகள் மற்றும் பெண்களுடன் நேரத்தை செலவிடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அர்ஜுனின் இந்த வாழ்க்கை முறை அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிடும் என்று எச்சரித்த யோகராஜ் சிங், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத ஒருவரால் ஒருபோதும் தனது மகன் யுவராஜ் சிங் அளவுக்கு உயர முடியாது என்று மிக காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் சச்சின் டெண்டுல்கரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு காலத்தில் அர்ஜுனுக்கு யோகராஜ் சிங் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதே அர்ஜுனின் அணுகுமுறை குறித்து அதிருப்தி கொண்டிருந்த அவர், தற்போது அர்ஜுன் தனது திறமையை வீணடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “வெறும் ஸ்டைலாக இருப்பதும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதும் உங்களை ஒரு சிறந்த வீரராக மாற்றாது மைதானத்தில் சிந்துக்கின்ற வேர்வையே உங்களைச் சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும்” என அவர் அர்ஜுனுக்குப் புத்திமதி கூறும் வகையில் பேசியுள்ளார். இந்த அதிரடியான விமர்சனம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…