தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து திரைக்கதையில் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடித்திருந்தார். இந்த ரோடில் நடிப்பதற்கு நடிகர் யோகி பாபு சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
