VFX-இல் கங்குவா, அயலானை தூக்கி சாப்பிட்ட யோகி பாபு படம்… CG மூலம் யாழியை மீண்டும் கொண்டு வந்த பட குழு..

By Ranjith Kumar on மார்ச் 18, 2024

Spread the love

காமெடி நடிகரை தாண்டி தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பதால் யோகி பாபு. அவர் நடிப்பில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்த படங்கள் தான் ஜெயிலர், பொம்மை நாயகி, மண்டேலா போன்ற படங்கள். தற்போது இவர் பிற்கால வரலாறை கொண்ட பழங்கால கதை அமைப்பில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபாபதி தாமஸ் எழுதி இயக்கும் படம் தான் கஜானா.

இப்படத்தை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் தான் தயாரித்து வெளியிட உள்ளதாம். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார் அவருடன் இணைந்து வேதிகா, இனிகோ பிரபாகர், சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், வேலு பிரபாகரன் போன்ற மாபெரும் பிரபல நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழ் சினிமாவில் பல படங்கள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு மக்கள் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. அந்த நிலையில், இருக்கும் எல்லா படங்களையும் தாண்டி சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, ஆனால் மக்களே வியந்து போகும் அளவிற்கு VFX, GC-யை பிரமாண்டமாக அமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

   

பிரபாவதி தாமஸ் இயக்கும் இப்படத்தில், பழங்கால கதை அமைப்பு இருப்பதால் அழிந்துபோன மிருகமான யாழ், சிங்கம், பழங்கால யானை போன்ற உயிரினங்களை உருவாக்கி மிகப்பிரமாண்டமாக தத்ரூபமாக வடிவமைத்துக் கொண்டு வருகிறார்களாம். இது மற்ற படங்களை ஒப்பிடும்போது மிக குறுகிய பட்ஜெட்டில் VFX, CG மிக சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியாகும் கங்குவா, சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் GOAT இப்படங்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு மிகச் சிறப்பாக அனிமேஷன் வடிவமைத்து கொண்டிருக்கிறார்களாம்.

   

மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கெல்லாம் இன்டர்நேஷனல் அளவு VFX,CG டீம்களை இறக்கி அமைக்கும் சமயத்தில், இவர்கள் சேலத்தில் உள்ள ஆரம்பகட்ட VFX, CG குழுவான Green scar vfx என்ற டீம்தான் இதை உருவாக்கி உள்ளதாம். இவ்வளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்க முடிகிறது என்று பலரும் இவர்களை பாராட்டி வருகிறார்கள். படம் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக எளிதில் பிடித்துப் போகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.