இதெல்லாம் சகஜம் தான்…! பத்திரிக்கையாளரின் கேள்வி…! டென்ஷன் ஆன யோகிபாபு…. அப்படி என்ன கேட்டார்…?

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில், “சிறு படங்களின் விழாக்களுக்கு வருவதில்லை, ஆனால் ஊதியத்தை மட்டும் சரியாகப் பெற்றுக்கொள்கிறீர்கள்” என்ற கேள்வி அவரை அதிருப்தி அடையச் செய்தது.

இதற்குப் பதிலளித்த அவர், பழைய சிக்கல்களைப் பற்றிக் கிளறாமல் தற்போதைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசுமாறு கேட்டுக்கொண்டார். நல்ல தயாரிப்பாளர்களுக்குத் தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும், நேரம் கிடைக்கும்போது அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்வதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

ஒரு படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் போது, தன்னை முன்னிலைப்படுத்திப் பெரிய அளவில் விளம்பரம் செய்வதை அவர் சுட்டிக்காட்டினார். நகைச்சுவை நடிகராக மட்டுமே அணுகினால் நிச்சயம் வருவேன் என்றும், தன்னை மட்டும் பெரிய ஆளாகக் காட்டி அழைக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

   

சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளாகப் பயணித்து வரும் நிலையில், வளர்ச்சி அடையும் போது இதுபோன்ற புகார்கள் வருவது சகஜம்.  தற்போது தனது வளர்ச்சியைப் பிடிக்காதவர்களே இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக அவர் தெரிவித்தார். தனக்கு வரும் விமர்சனங்களைக் கவனித்து, ஆக்கப்பூர்வமான முறையில் தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் யோகிபாபு கூறியுள்ளார்.