#image_title
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான இவர் பின்னர் படங்களில் சிறிய சிறிய காமெடிகளாக பாத்திரங்களில் நடித்தார்.
தன்னுடைய கவுண்டர் மூலமாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இவர் தற்போது அவர் இல்லாத படங்களை இல்லை என்ற அளவிற்கு மாறிவிட்டது. கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன், அயலான் மற்றும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் . காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது பல படங்களை தனது கையில் வைத்திருக்கும் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் ஆஸ்தான காமெடி நடிகராக வலம் வருகிறார். ஏனென்றால் நடிகர் சூரி காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக களமிறங்கி இருக்கின்றார். ஏற்கனவே சந்தானம் ஹீரோவாக தான் நடித்து வரும் நிலையில் பாபு மட்டும் தான் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இதனால் எந்த திரைப்படமாக இருந்தாலும் அவரை தான் பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடிப்பதற்கு அழைக்கின்றார்கள். இதனால் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கின்றார் யோகி பாபு. அதாவது ஒரு நாளைக்கு மட்டும் 12 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது youtube பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…