தமிழ் சினிமாவில் தற்போது இவர் இல்லாத படங்களை என்று அளவிற்கு பிரபலமாகிவிட்டார் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவரது கதாபாத்திரம் இருக்கின்றது. ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக மாறி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தோனி தயாரித்திருந்த எல்ஜிஎம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட யோகி பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். செய்தியாளர்களில் ஒருவர் செந்தில் கவுண்டமணி காலத்தில் காமெடி எல்லாம் மிகச்சிறப்பாக இருந்தது. நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

#image_title

#image_title
ஆனால் தற்போது வரும் காமெடிகளில் அந்த அளவு சுவாரஸ்யம் இல்லை, சிரிக்கும் வகையிலும் இல்லை என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த யோகி பாபு நீங்கள் சென்சார் போர்டு இடம் கூறி சில வார்த்தைகளுக்கு தடை போட வேண்டாம் என்று சொல்லுங்கள். கட்டாயம் சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்று கூறியிருந்தார்.