ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென கேக் வெட்டி கொண்டாடிய ‘எதிர்நீச்சல்’ சீரியல் குழு… ஓ இதுதான் விஷயமா..?

By Begam

Published on:

சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்று டிஆர்பி-யில்  முன்னிலை வகிக்கும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’ இந்த சீரியல் இன்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தில் ஆணாதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் எப்படி போராடுகிறார்கள்? என்பதை குறித்து இந்த சீரியல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்த சீரியலை குடும்பத்தோடு ஆண்கள் முதல் பெண்கள், குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். சமீபத்தில் இந்த சீரியலில் நடித்த நடிகர் மாரிமுத்து இறந்தது சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சீரியலுக்கு தற்பொழுது கொஞ்சம் மவுஸ் குறைந்துவிட்டது என்று கூறலாம். இதனை மீட்டெடுக்க இயக்குனரும் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார்.

ஆதி குணசேகரனாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் மாரிமுத்து இறந்த மதியமே சன் தொலைக்காட்சியில் இருந்து வேல ராமமூர்த்திக்கு அழைப்பு வந்ததாக கூறியிருந்தார்.

கிடாரி, கொம்பன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வேலராமமூர்த்தி. தற்பொழுது இவர்  எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் புதுப்புது  கதைக்களத்துடன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் தற்பொழுது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் தொடங்கி 2 வருடங்கள் நிறைவடைந்ததை சீரியல் குழுவினரும், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும், இயக்குனரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சீரியல் குழுவுக்கு கூறி வருகின்றனர்.