காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்… திமுக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய கூட்டணிக் கணக்குகள் தலைகீழாக மாறிவரும் சூழலில், திமுக கூட்டணி இரண்டே மாதங்களில் சுக்குநூறாக உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முறைப்படி வெளியேறியுள்ளது.

முன்னதாக, “திமுக கூட்டணி என்ற ஒன்றே தற்போது இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அக்கூட்டணியில் இருந்து அக்கட்சியும் முற்றிலுமாக விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் அதிர்வலைகளுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணி நமக்கு வேண்டாம் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதன் தலைவர் கமல்ஹாசனுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.