Categories: சினிமா

பாக்யராஜ் செய்த விஷயத்தால் கோபமான ஜேசுதாஸ்… என் உதவியாளரை பாட அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு சென்றதன் பின்னணி என்ன?

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.

இதற்கிடையில் அவர் இளையராஜாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். அவரின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு அவர்தான் இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானாலும் அவர் இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள் போல அமையவில்லை.

இந்த படத்தின் ஒரு பாடல் பதிவிற்காக ஜேசுதாஸை அழைத்துள்ளார்கள். பாடல் ரெக்கார்டிங்குக்கு தயாரான போது ஜேசுதாஸ் “பாடலை எப்படி பாடவேண்டும் என சொல்லுங்கள்’ எனக் கேட்டுள்ளார். அப்போது பாக்யராஜ் தன்னுடைய இசை உதவியாளரை உள்ளே அனுப்பி அவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க சொல்லியுள்ளார்.

அவர் உள்ளே சென்று பாடல் சொல்லிக் கொடுத்ததும் ஜேசுதாஸ் கடும் கோபமாகியுள்ளார். பாக்யராஜை முறைத்துப் பார்த்து “யார் இவர்” எனக் கேட்டுள்ளார். அதற்கு பாக்யராஜ் “என்னுடைய உதவியாளர்தான் சார்” எனக் கூறியுள்ளார். அதனால் மீண்டும் கோபமான “ஜேசுதாஸ் ரெக்கார்டிங் ரூமில் இருந்து வெளியேறி ‘நானும் இந்த பாட்டைப் பாட என்னுடைய உதவியாளரை அனுப்பி வைக்கிறேன்’ என சொல்லி சென்றுவிட்டாராம்.

அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து பாக்யராஜே எப்படி பாடவேண்டும் என சொல்லிக்கொடுத்து பாடவைத்தாராம். இந்த தகவலை பாக்யராஜே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

அடபாவேமே..! பள்ளிக்குள் ரத்த வெறி… டீச்சரை வெட்டி Facebook Live போட்ட பையன்… வகுப்பறையில் அலறல்… நடுங்க வைக்கும் பின்னணி…!!

மலேசியாவின் குச்சிங் பகுதியில் இயங்கிவரும் சர்வதேசப் பள்ளி ஒன்றில், பதினாறு வயது மாணவன் தனது பெண் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய…

6 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல்….. சீனியர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி டாஸ்க்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

5 தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

7 minutes ago

நொடிகள் தப்பிய உயிர்!… சுழன்ற ராட்டினத்தில் நடந்தது என்ன?… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… வெளியான அதிரவைக்கும் காட்சி…!!

பீகாரின் கதிஹார் பகுதியில் அமைந்துள்ள படி துர்கா ஸ்தான் தசரா திருவிழாவில் எதிர்பாராத விதமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு…

14 minutes ago

“இன்ஸ்டா புகழ் தந்த போதை”…. கணவனைப் பிரித்த இளம்பெண் மீது சாணி ஊற்றி வெறிச்செயல்…. நடுரோட்டில் நடுங்க வைத்த சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பழக்கம் காரணமாக ஏற்பட்ட தகராறு மற்றும் மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை…

16 minutes ago

“கள்ளக்காதலுக்கு இடையூறு”…. கணவனை தீர்த்துக்கட்டிவிட்டு 22 நாளாக ஊர் சுற்றிய கொடூர மனைவி…. இறுதியில் நடந்த பயங்கரம்…. அதிர்ச்சி சம்பவம்….!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

“அவன் திருடன் இல்ல!”… அடியால் மரணமா? திடீர் மாரடைப்பா?… ஒரே ஒரு சந்தேகத்தால் பறிபோன அப்பாவி உயிர்… போலீஸ் தீவிர விசாரணை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில், ராம்லீலா நிகழ்வைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த விபின் என்ற இளைஞர் மீது திருடன்…

22 minutes ago