“சைலண்டாக காய் நகர்த்தும் இந்தியா”… ரூ 8,742 கோடி ரகசிய டீல்… இந்திய தூதரை நேரில் சந்தித்த ஆப்கான் தலைவர்… அடுத்த லெவலுக்கு செல்லும் இந்தியா… பதறிய உலக நாடுகள்…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆப்கானிஸ்தான் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைவர் யதின் படேலை, ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் சயீத் கரீம் ஹாஷெமி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இருநாட்டு வர்த்தகர்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் தொழில் விசா நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என ஆப்கான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தானின் முக்கிய உற்பத்திப் பொருட்களான வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், புதிய சர்வதேச சந்தைகளை உருவாக்கவும் இந்தியாவின் ஆதரவை அவர்கள் கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பிரதிநிதியின் இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்தியத் தூதர் யதின் படேல், இருதரப்பு பொருளாதார உறவுகளை பலப்படுத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு வர்த்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கும், தொழிலதிபர் மன்றங்களின் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கும் இந்தியா விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. கடந்த 2025 – 26 நிதி ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு சுமார் ₹8,742 கோடியை எட்டியுள்ள நிலையில், தற்போதைய புதிய முயற்சிகள் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரக் கூட்டுறவும், வர்த்தக உறவும் மேலும் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.