“யஷ் நீ என் தங்கம். பேபி”… பெண் ரவுடியிடம் இன்ஸ்பெக்டர் செய்த அந்தரங்க லீலைகள்… கமிஷனருக்கு பறந்த புகார்… !!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் ரவுடி ஒருவருக்கு காவல் ஆய்வாளர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொன்னாகொண்டே காவல் நிலைய ஆய்வாளர் பாப்பண்ணா, வழக்கு விசாரணைக்காக வந்த ‘சரித்திர பதிவேடு’ குற்றவாளியான யசஷ்வினி என்பவரின் செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார். அதன் பிறகு, அந்தப் பெண்ணுக்கு ‘செல்லம்’, ‘பேபி’ என குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், நள்ளிரவில் ஆபாசமாகப் பேசி லவ் டார்சர் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பாப்பண்ணாவின் தொந்தரவு எல்லை மீறியதால், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். ஆய்வாளர் தன்னைத் தனிமையில் சந்திக்க வற்புறுத்துவதாகவும், வீட்டிற்கு வந்து சிக்கன் சமைத்து ஊட்டிவிடுவதாக ஆபாசமாகப் பேசுவதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கூலிப்படையை ஏவி கணவர் மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதாகவும், தனது மனைவி முதல்வர் சித்தராமையாவின் உறவினர் என்பதால் தன்னை யாரும் அசைக்க முடியாது என மிரட்டியதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும், காவல்துறையினரின் இத்தகைய கீழ்த்தரமான செயலால் தான் மிகவும் மனமுடைந்துள்ளதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். புகாருடன் சேர்த்து அவர் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் கமிஷனரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Muthu Mani

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago