ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் கூறிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை!…. இப்பதானப்பா கல்யாணமே ஆச்சு?…. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்!….

By Begam

Published on:

‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகையான நடிகை நக்ஷத்ரா ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.

தமிழில் 2016 ல் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா குட்டிசேரி. இப்படத்தினை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரை உலகில் இருந்து விலகி இருந்தார்.

   

பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் வெள்ளி திரையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாவிட்டாலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது இந்த சீரியலில் இவரது இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ என்ற சீரியலிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலர் விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நக்ஷத்ரா.

இந்நிலையில் இவர் கர்ப்பமாக உள்ளதால் சில நாட்களுக்கு எந்த சீரியலும் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை நக்ஷத்ராவின் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் அவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்பொழுது இந்த செய்தி இணையத்தில் வெளியாக அவரது ரசிகர்களும் நடிகை நக்ஷத்ராவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.