தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா உள்ளிட்டா பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் பாட்டுக்கு தமன்னா ஆடிய நடனம் பலரையும் கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாட்டுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது WWE வீரர் கிரேட் காளி காவலா பாட்டுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
