எழுத்தாளர் சுஜாதா சொன்ன அட்வைஸ்… இப்போ வரைக்கும் அவன்தான் எனக்கு சோறு போடுறான் – பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

By vinoth on பிப்ரவரி 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

   

அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். இப்போது அவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி அதை இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் நாளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.

   

 

பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது சம்மந்தமாக சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பேசும்போது “என்னை ஒருநாள் எழுத்தாளர் சுஜாதா அழைத்து ‘நீ நடிப்பதை மட்டும் நிறுத்தாதே..உன்னிடம் வித்தியாசமான ஒரு நடிகன் இருக்கிறான். நடிக்கிறான் என்று தெரியாமலே அவன் நடிக்கிறான்.” என சொன்னார்.

அதுதான் இப்போது வரை நடக்கிறது. இயக்குனர் பார்த்திபனுக்கு நடிகர் பார்த்திபன்தான் இப்போது வரை சோறு போட்டுகொண்டிருக்கிறான். நாலு படம் போய் நடிப்பேன். அதை வைத்து ஒரு படம் எடுப்பேன். இப்போது கூட சில படங்களில் நடிக்கிறேன். அதில் பணம் சேர்ந்ததும் மீண்டும் படம் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.