வாவ்!!.. செம ஜோடி!!.. காதல் மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சதீஷ்… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

By Begam

Published on:

நடிகர் சதீஷ் தனது மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் போன்று பல்வேறு காமெடி நடிகர்கள் தற்பொழுது புதிதாக உருவாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ். இவர் எட்டு வருடங்களாக கிரேசி மோகன் இடம் உதவியாளராக பணியாற்றினார்.

   

 

இவர் முதன்முதலில் ஏ எல் விஜய் இயக்கிய ‘பொய் சொல்ல போறோம்’ என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். இதை தொடர்ந்து மதராசபட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். இவர் 2003 இல் வெளியான ‘விடாது சிரிப்பு’ என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார்.

அதிகமான படங்களில் ஒப்பந்தமாகி தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘கணம்’ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இவர் சன்னிலியோனியுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

நடிகர் சதீஷ் 2019ல் சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் சதீஷ். இவர் தற்பொழுது தனது மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘வாவ்.. சூப்பர் ஜோடி’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…