#image_title
நம்மில் உயர்ந்த மரம் எதுவென்று கேட்டால் சந்தன மரம், தேக்கு மரம் என்றுதான் கூறுவோம். ஆனால் புஷ்பா படம் வந்த பிறகு செம்மரம் கொஞ்சம் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு தங்கத்தை விட விலைமதிப்புள்ள மரம் ஒன்று இருக்கிறது. அது தான் அகர் மரம். மரங்களுக்கெல்லாம் ராஜாவாகத் திகழும் அகர் மரத்தின் இவ்ளோ காஸ்ட்லியான மதிப்பிற்கு என்ன காரணம் தெரியுமா?
சித்த மருத்துவத்தில் மற்றும் அரோமா எனும் வாசனை மருத்துவத்தில், உயரிய இடத்தில் உள்ள அகர் மரத்தின் மதிப்பு, உலகிலேயே, செயற்கை முறையில் தயாரிக்க இயலாத, அதன் இயல்பான வாசனைத் தன்மையால் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
#image_title
மேலும் அகர் மரத்தின் பிசின்கள், மிக அதிக விலை மதிப்பு கொண்டவை. அவையே, வாசனை திரவியங்களாக சுத்திகரிக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில், வளைகுடா நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த ஒரு பாட்டே போதும்.. எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய இளையராஜா.. இதான் காரணமா?
அரபு நாடுகளில், அகர் வாசனைக்கு சிறந்த இடம் உண்டு, வீடுகளில் நாம் சாம்பிராணி போடுவது போல, பெரிய அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் இவர்கள் வசிக்கும் இடங்களில், நிறுவனங்களில் முக்கியமான பேச்சு வார்த்தைகளின் போது, அகர் கட்டைகளைக் கொண்டு, புகை மூட்டம் போட்டு, அந்த இடங்களை அற்புத நறுமணத்தால் நிறைய வைப்பது, அங்கே, வழக்கமான ஒரு நிகழ்வாகும்.
இன்றைய சந்தை விலை நிலவரப்படி இந்த மரத்தின் ஒரு கிலோ கட்டைக்கு இருக்கும் விலையை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கிலோ அகர் மரக்கட்டியின் விலை அமெரிக்க மதிப்பில் 1,00,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம். மேலும் இதன் தரத்தினைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. (தகவல் உதவி: பிசினஸ் இன்சைடர்)
#image_title
இதுமட்டுமின்றி இந்த மரத்திலிருந்து 500 வகையான வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
ஆலமரத்தின் கீழ் உருவான இனிப்பு சாம்ராஜ்யம்.. ‘அடையார் ஆனந்த பவன்’ உருவான வரலாறு..
சந்தன மரத்துடன் அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.
அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்றுபட்டு கலந்திருக்கின்றது.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…