பேங்க் ஆப் இந்தியாவில் வேலை… 514 அதிகாரி பணியிடங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

பேங்க் ஆப் இந்தியா (Bank of India) வங்கியில் காலியாக உள்ள 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: கிரெடிட் ஆபிசர் (Credit Officer)

   

மொத்த காலியிடங்கள்: 514

   

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

சம்பளம்: மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு  மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5, 2026