கண்ணீர்..! “அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க, தம்பி நல்லா படிங்க” எஃகு ஆலை தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி வெளியிட்ட உருக்கமான இறுதி வீடியோ..!

Spread the love

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி ஒருவர் உயிரிழப்பதற்கு முன் தனது குடும்பத்தினருக்கு உருக்கமாகப் பேசிய இறுதி வீடியோ செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உருகிய இரும்பு திரவம் கொட்டிய விபத்தில் தீவிர தீக்காயமடைந்த தொழிலாளி, தனது மூத்த மகனிடம் தம்பியைக் கவனித்துக் கொள்ளுமாறும், இருவரும் நன்றாகப் படிக்குமாறும், தாயைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துவிட்டுப் பரிதாபமாக உயிர் பிரிந்துள்ளார்.

இந்தத் துயரமான விபத்து திங்கள்கிழமை மாலை எஃகு உருக்கு ஆலை-1-ல் வார்ப்புப் பணியின் போது ஏற்பட்டுள்ளது. கிரேன் மூலம் ஒரு வாளியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக் கொண்ட உருகிய இரும்புத் திரவம் திடீரென வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/hd_kumaraswamy/status/2064068802720235917/video/4

இவ்விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலையும் அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

22 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

23 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago