திக் திக் நிமிடங்கள்…! வேலை முடிந்து சைக்கிளில் திரும்பிய தொழிலாளி… இறுதி ஊர்வல வாகனம் மோதி பலி… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சாட்பூர் பகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகரில், 54 வயதான ராம் ஈஷ்வர் பிரசாத் என்ற தொழிலாளி இரவுப் பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இறுதி ஊர்வல வாகனம் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியாகி இணையத்தில் பரவி வரும் நிலையில், போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.