ஊசி போட்ட செவிலியர்…. சில நிமிடங்களில் மயங்கி விழுந்த தொழிலாளி… நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 45 வயது கூலித் தொழிலாளி பில்லத்தியான், தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த செவிலியர் ஒருவரிடம் ஊசி போட்டுக்கொண்ட சில நிமிடங்களிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தவறான சிகிச்சையால்தான் பில்லத்தியான் உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். தற்போது போலீசார் இச்சம்பவத்தைச் சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

சீன அதிபரைச் சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில்… தைவானுக்கு காத்திருந்த ஷாக்..உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிடமிருந்து முறைப்படி சுதந்திரத்தை அறிவிப்பதற்கு எதிராக தைவானை எச்சரித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான…

1 minute ago

“என் மனைவியின் குடும்பத்திற்காக இவர் காலில் விழுந்தேன்..!” செய்தியாளர் சந்திப்பில் கதறிய ஜெயம் ரவி.. யார் அந்த மர்ம நபர்..?

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…

5 minutes ago

என் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்ப மாட்டேன்… ஜெர்மனி அதிபர் பகிரங்க அறிவிப்பு..!!

ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…

6 minutes ago

மேலும் 15 பேருக்கு அமைச்சர் பதவி… முதல்வர் கையில் இருக்கும் அந்த லிஸ்ட்… யார் யார்..? இன்று வெளியாகப்போகும் அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…

14 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த அதிர்ச்சி..!!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…

33 minutes ago

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

10 மணத்தியாலங்கள் ago