வீட்டு உரிமையாளருக்கு இறுதி சடங்கு…! “வாடகைக்கு இருந்தவருக்கு நடந்த விபரீதம்….” பரிதவிக்கும் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2025

Spread the love

சென்னை மாவட்டம் முகப்பேர் மேற்கு சித்தர் நகரில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாராயணன் (41) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாராயணன் வீட்டு உரிமையாளர் காலமானார். அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை நாராயணன் வீட்டு உரிமையாளரின் உறவினர்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருந்தார். உடலை வைக்கும் சவப்பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார்.

அப்போது மது போதையில் இருந்த நாராயணன் மின்சார பாக்ஸை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாராயணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.