உங்க சொந்த மாவட்டத்திலேயே தேர்வு இல்லாத வேலை..! 12th முடித்திருந்தால் போதும்… ரூ.18,000 வரை சம்பளம்..!!

By Soundarya on புரட்டாதி 27, 2025

Spread the love

சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்கில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)

   

மொத்த காலியிடங்கள்: 20

   

விண்ணப்ப ஆரம்ப நாள்: 23.09.2025

 

விண்ணப்ப கடைசி நாள்: 07.10.2025

சம்பளம்:18000-28,000

வயது வரம்பு : 42 க்கு மிகாமல்

விண்ணப்பப் படிவத்தை https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும். பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண்:1, புதுத்தெரு, வணிகவளாகம் GCC, முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016, (RTO அலுவலகம் அருகில்).