“Chokers இல்ல, நாங்க சாம்பியன்ஸ்”… 28 வருட போராட்டத்திற்குப் பிறகு வெற்றி வாகை சூடிய இந்திய மகளிர் அணி…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் 87 ரண்களும், வந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

என்னதான் திறமை இருந்தாலும் கோப்பையை வெல்லாது அணியை வசைப்பாடிக்கொண்டே தான் இருப்பார்கள். மகளிர் ODI, உலகக்கோப்பை வரலாற்றில் 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டில் அரையிறுதி வரை முன்னேறியும் 2005 மற்றும் 2017-ல் இறுதிப்போட்டியில் விளையாடி ரன்னர் அப் ஆக வெறும் கையுடன் திரும்பியதால் இந்திய அணி மீது Chokers டேக் இருந்தது. இன்றைய வெற்றியானது Chokers டேக்கை உடைத்ததோடு மட்டுமின்றி பல விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.