தமிழக அரசால் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை ஆயிரக்கணக்கான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்தத் தொகை சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்துப் பொதுமக்கள் நேரில் சென்று முறையிட்ட பிறகே, பணம் வரவு வைக்கப்படாத விஷயமே தங்களுக்குத் தெரியவந்ததாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதோடு, சென்னை தலைமையகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கூறிப் பொறுப்பைத் தட்டிப் கழிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறா அல்லது நிர்வாகத் தாமதமா எனத் தெரியாமல் ஏழை எளிய பெண்கள் திகைத்து நிற்கும் சூழலில், உங்கள் கணக்கில் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை சரியாக வந்து சேர்ந்துவிட்டதா?
