மகளிர் உரிமைத் தொகை ரூ.2500…. இப்போதைக்கு சான்ஸே இல்ல…. அமைச்சரின் அதிரடி அறிவிப்பால் ஆடிப்போன தமிழக பெண்கள்…!

By Nanthini on ஆனி 21, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தற்போதைக்குச் சாத்தியமில்லை என்று அம்மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தற்போதைய நிதிநிலைமை மோசமாக இருப்பதால், அதனை முதலில் சீரமைத்த பிறகே அனைவருக்கும் இந்தத் தொகையை விரிவுபடுத்தி வழங்க முடியும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது ஆண்டுக்குக் குடும்ப வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்கும் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே மாதந்தோறும் ₹1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ₹2500 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அண்மையில் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது, இப்போதைய அரசியல் சூழலில் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.