காலையிலேயே குட் நியூஸ்… இன்ப அதிர்ச்சி தரும் CM விஜய்…. குடும்பத் தலைவிகளுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மெகா அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு உயர்வு, மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்ட விரிவாக்கம் மற்றும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் எதிர்பாராத நேரத்தில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். குறிப்பாக, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டங்கள், குடும்பப் பெண்களின் நிதிப் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால் மகளிர் மத்தியில் அதிக அளவிலான மகிழ்ச்சியையும் வரவேற்பையும் உருவாக்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்தும் முதல்வர் விஜய் விரைவில் ஒரு “இன்ப அதிர்ச்சி” செய்தியை வழங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது இந்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான இந்த அறிவிப்புகள், மாநிலத்தின் நல்வாழ்வுப் பயணத்தில் அடுத்தகட்ட முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.