மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு?…. இரவோடு இரவாக அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்கான தவணைத் தொகையாக ₹1,000 வழங்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், இத்தொகை விரைவில் ₹2,500 ஆக உயர்த்தப்படும் என்று மகளிர் நலன்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இதற்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, தமிழக பெண்களிடையே பெரும் வரவேற்பையும், இத்திட்டத்தின் அடுத்தகட்ட உயர்வு மீதான எதிர்பார்ப்பையும் தற்பொழுது அதிகரித்துள்ளது.