மகளிர்க்கு பேரதிர்ச்சி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500…. பட்ஜெட்டில் CM விஜய் வைக்கப்போகும் ‘மாஸ்’ செக்…. வெளியான ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும் பணிகளை முடுக்கிவிடுமாறு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதால், இம்முறை தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்திலேயே (பட்ஜெட்) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், தற்போதுள்ள கடுமையான நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டே தொகையை உயர்த்தி வழங்குவது குறித்த சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, நிதி நிலையைச் சீரமைத்த பிறகு, வரும் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு இடம்பெறும் என்று தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.