தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்ப தலைவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த திட்ட விரிவாக்கத்திற்கு அரசு 7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும் புதிதாக 5883 பேருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என்றும் அன்புமணி குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனாளர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்ட உள்ள நிலையில் இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…