இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ 1,000 வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை நாளாக அமைவதால், ஒரு நாள் முன்னதாகவே அதாவது நாளைய தினமே (நவம்பர் 14) உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பும் மாதத்தின் 15-ம் தேதி விடுமுறை நாட்களில் வந்தபோது, மகளிரின் நலன் கருதி முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை முதலே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ 1,000 சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.