தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். எனவே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமை தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கப் போகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…